சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி சுரேஷ் சலேவின் தனிப்பட்ட மடிக்கணினி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கையின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் தொடர்பான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி, கடந்தகால அரசியல் படுகொலைகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் இந்த லேப்டாப்பில் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், இந்த மடிக்கணினியின் கடவுச்சொற்களை (Passwords) வழங்குமாறு சி.ஐ.டி அதிகாரிகள் பலமுறை கோரியும், பலம் வாய்ந்த நபர்களின் பெயர்கள் வெளியில் வந்துவிடும் என்பதால் சலே அதனை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பான பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri