இலங்கை முழுவதும் மின்தடை: நாடு இருளில் மூழ்கியமைக்கான காரணம் அம்பலம் - மன்னிப்பு கோரிய சபை
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தடைக்கு தமது தவறே காரணம் என இலங்கை மின்சார சபை பொறுப்பேற்றுள்ளது.
குறித்த தகவலை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின் துண்டிப்பு
மேலும் தெரியவருகையில், கடந்த 9 ஆம் திகதி மாலை 5.15 அளவில் நாடு முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால் ழுழுநாடும் இருளில் மூழ்கியது. பின்னர் இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது.
மின் தடை சுமார் 5 மணிநேரம் தொடர்ந்த நிலையில், நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டதுடன் பொதுமக்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தடைக்கு தமது தவறே காரணம் என இலங்கை மின்சார சபை பொறுப்பேற்றுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திடீர் கோளாறு
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின்சார பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.
திடீர் மின்தடை ஏற்படும் பட்சத்தில் கூடுதல் மின் உற்பத்தியை பராமரிக்க வேண்டும் என்றாலும் செலவு இல்லாததால் கூடுதல் மின் உற்பத்தியை பராமரிக்க முடியாது உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும், கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையே நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட கிழக்கு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |