வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி
முன்னணி விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தெரிவித்து அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளாா்.
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விளையாட்டு சம்மேளன பதிவு
பிரதானமான 5 தேசிய சங்கம்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை இடைநிறுத்துவதாக தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளாா்.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோ நிர்வாக மற்றும் பிற நடவடிக்கைகளை தொடர்வதற்கான அதிகாரம் கொண்டவராக கடந்த 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
இவர் சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்றுவார் என அமைச்சர் அந்த வர்த்தமானி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கை வில்வித்தை சங்கம், இலங்கை கபடி கூட்டமைப்பு, இலங்கை மல்யுத்த சம்மேளனம், இலங்கை பாலம் கூட்டமைப்பு, இலங்கை ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஆகிவற்றின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
