இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் புதிய இணையத்தளம்
இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களை (NGO) ஒரே தளத்தின் கீழ் இணைக்கும் நோக்கில், Save a Life நிறுவனம் Sri Lanka NGO Community என்ற புதிய இணையத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையத்தளத்தின் மூலம் NGO நிறுவனங்கள் ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், நிதி உதவி வாய்ப்புகளை அறிந்துகொள்ளவும், கூட்டுத் திட்டங்களை முன்னெடுக்கவும், அனுபவங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
மேலும், நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய அடைவு, நிதி உதவி மற்றும் மானிய வாய்ப்புகள், திட்டப் பங்காளர்களைத் தேடும் வசதி, பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயனுள்ள ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிய இணையத்தளம்
இலங்கையின் NGO துறையில் ஒத்துழைப்பையும் பரஸ்பர அறிவுப் பகிர்வையும் மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த சமூகத்தில் இணைய விரும்பும் நிறுவனங்கள் www.slngoc.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri