காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
அம்பாறை- தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(1.11.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், அலஹேனா கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழப்பு
உயிரிழந்த நபர் அப்பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றில் கல்வெட்டும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவராவார்.
தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே, எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.

அலஹேனா, மடவலலந்தா உள்ளிட்ட அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த பல நாட்களாகவே ஒற்றை காட்டு யானையொன்று தொடர்ச்சியாகச் சுற்றித் திரிந்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
துரித நடவடிக்கை
காட்டு யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்திருந்த நிலையிலேயே தற்போது இந்த உயிரிழப்புச் சம்பவம் சம்பவித்துள்ளது.
சம்பவம் குறித்து தமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஒற்றை யானையை உடனடியாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கவலையுடனும் ஆத்திரத்துடனும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam