பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய திட்டம்
பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புதிய திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி ஆகியோர் கூறியுள்ளனர்.
புதிய வகை வழிமுறைகள்
இது தொடர்பில் வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் புதிய திட்டம் உள்ளது. இந்த பகுதி மிகவும் சிறியது, புதிய வகை வழிமுறைகளை கையாளும் போது பத்து நாட்கள் வரை ஆகலாம்.
ஆனால், இது விரைவில் நிறைவுபெறும் வகையில் இருக்கும். எம்.எச். 370 பாகங்கள் கண்டுபிடிக்கும் வரை, அதற்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது," என கூறியுள்ளார்.
மார்ச் 8, 2014 அன்று 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் MH370 விமானம் தெற்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் செல்லும் வழியில் மாயமானமை குறிப்பிடத்தக்கது.
[DJ7K4KX ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெற்றோர்களுக்கு தெரிந்த உண்மை, ஷாக்கில் ஆனந்தி எடுத்த சோகமான முடிவு... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam
