கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் மர்மமாக உயிரிழந்த நபர் : தப்பியோடிய காதலி
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஹோட்டலில் தங்கிய குடும்பஸ்தர் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவருடன் வந்து ஹோட்டலில் தங்கியிருந்த 55 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருடன் வந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டலில் மரணம்
இருவரும் ஹோட்டலுக்கு வந்து சில நிமிடங்களில் திடீரென அறையை விட்டு அலறியடித்தபடி பெண் வெளியே வந்துள்ளார்.
அந்த பெண் பதற்றத்துடன் வந்து, தன்னுடன் வந்தவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஹோட்டல் மேலாளரிடம் கூறியுள்ளார்.
பின்னர், முகாமையாளர் அங்கு சென்று பரிசோதித்தபோது, குறித்த நபரின் வாயில் இருந்து சளி போன்று வெளிவருதை கண்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முச்சக்கரவண்டியை எடுத்து வருவதற்காக விடுதிக்கு வெளியே சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற காதலி
இதன்போது குறித்த பெண் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகயீனமடைந்து உயிரிழந்த நபர் வெரஹெர போதிராஜபுர பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
you may like this

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
