டுபாய் வேலைவாய்ப்புக்காக முகப்புத்தகத்தில் விளம்பரம்: சந்தேகநபரை சுற்றிவளைத்த பொலிஸார்
டுபாயில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இரகசிய தகவலொன்றின் ஊடாக கண்டியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்திலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினூடாக இந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணை
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
You may like
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |