அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் கடந்த வார இறுதி வரையான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி
இதன்படி, குறித்த காலப்பகுதியில் ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஸ்ரேலிங் பவுண்ட்ஸுற்கு நிகராக 5.6 சதவீதத்தினாலும் யூரோவுக்கு நிகராக 7.8 சதவீதத்தினாலும் இந்திய ரூபாவுக்கு நிகராக 11.8 சதவீதத்தினால் குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri