எரிபொருட்கள் பிணக்குகளை தீர்ப்பதற்கான புதிய நடைமுறை
பெற்றோலிய எரிபொருட்கள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்கள் பிரிவின் முறைப்பாடுகளைக் கையாளுதல் மற்றும் பிணக்குகளை தீர்ப்பதற்கான நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல் கோவை எரிசக்தி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.
எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆனணக்குழு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
எரிபொருள் நுகர்வோரின் உரிமைகள் எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களின் கடமைகள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் , எரிசக்தி துறை அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam