கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிய சிக்கல்: பாதிப்படையும் நோயாளிகள் - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ‘பெட் ஸ்கேன்’ (PET) பரிசோதனைகள் இன்னம் சில நாட்கள் மாத்திரமே என விஞ்ஞான தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ‘பெட் ஸ்கேன்’ (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் ஓய்வு பெறுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதுமே இந்த நிலைமைக்கு காரணம் என சானக தர்ம விக்ரம சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ‘லினிட்டர் எக்ஸிலரேட்டர்’ இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |