ஊழல் மோசடிகளுக்குப் புதிய ஆளுநர் இடமளிக்கக் கூடாது: சாணக்கியன் வலியுறுத்து

Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Jun 01, 2023 07:37 PM GMT
Report

ஊழல், மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

இன்று (01.06.2023) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல் மோசடிகளுக்குப் புதிய ஆளுநர் இடமளிக்கக் கூடாது: சாணக்கியன் வலியுறுத்து | New Governor Not Allow Corruption And Scams

ஆளுநரின் செயற்பாடுகள்

முதலில் புதிய ஆளுநருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த காலங்களில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் அனைத்துமே பல சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆளுநரின் செயற்பாடுகள் மிகவும் மோசமானவையாகவே காணப்பட்டன.

அதனால் அனைத்து கூட்டங்களுமே சர்ச்சைக்குரியவைகளாகக் காணப்பட்டன. அந்தக் காலத்தில் பல ஊழல், மோசடிகளும் இடம்பெற்றிருந்தன.

ஊழல் மோசடிகளுக்குப் புதிய ஆளுநர் இடமளிக்கக் கூடாது: சாணக்கியன் வலியுறுத்து | New Governor Not Allow Corruption And Scams

அதற்குச் சில அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தனர். சில அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்காத தீர்மானங்களை எடுத்த தீர்மானங்களாக அறிவிக்கப்பட்ட நிலைமைகளும் காணப்பட்டன.

மக்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் தங்களது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிலரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

அரசியல் தலையீடுகள் மற்றும் ஊழல், மோசடிகள்

பல கூட்டங்களில் நாம் எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தோம். அந்த நேரத்தில் எம்மைக் கூட்டங்களுக்கு சமூகமளிப்பதற்குக் கூட அனுமதிக்காத சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.

சில சந்தர்ப்பங்களில் சிறிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளில் கூட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் தலையீடு அல்லது சிபாரிசுடன் முன்னெடுக்க வேண்டிய நிலைமைகளும் காணப்பட்டன.

ஊழல் மோசடிகளுக்குப் புதிய ஆளுநர் இடமளிக்கக் கூடாது: சாணக்கியன் வலியுறுத்து | New Governor Not Allow Corruption And Scams

இவற்றைத் தட்டிக் கேட்கும் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன.

எனினும், தற்போது பதவியேற்றுள்ள ஆளுநர் இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டு ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்பட்டால் அவரது நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளோம்.

மேலும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் காணப்படும் அரசியல் தலையீடுகள் மற்றும் ஊழல், மோசடிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநருடன் இணைந்து பயணிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US