வடக்கும் கிழக்கும் ஒன்றே! சாணக்கியன் சபையில் ஆவேசம் (Video)
‘‘ஜனாதிபதியுடன் நாளை மறுதினம் (12.05.2023) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கில் இருக்கும் அனைத்து கட்சிகளும் வர வேண்டும்‘‘என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (09.05.2023) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘‘தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் கட்சிகளுக்கு மக்கள் தந்த பொறுப்பு, மக்கள் தந்த ஆணை எங்களுடடைய மக்களுக்கான நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வினை பெறுவதாகும்‘‘ என இன்றைய அமர்வில் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பிலும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள சந்திப்புகளில் பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் சாணக்கியன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்த முழுமையான கருத்துக்களை இக்காணொளியில் காணலாம்,