வடக்கு கிழக்கு எம்.பிக்களை தனியாக சந்திக்க விரும்பியது ஏன்: தமிழரசிடம் ரணில் கூறிய பதில்

Ilankai Tamil Arasu Kachchi Ranil Wickremesinghe Sri Lanka Politician President of Sri lanka Sri Lankan political crisis
By Rakesh May 10, 2023 04:32 AM GMT
Report

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுக்குக் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில் தனக்கு எந்தவொரு ஆட்சேபமும் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தயார்படுத்தப்படாமையால் வடக்கு அபிவிருத்தி தொடர்பான விடயத்தையும் ஒத்திவைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் (09.05.2023 மாலை நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு எம்.பிக்களை தனியாக சந்திக்க விரும்பியது ஏன்: தமிழரசிடம் ரணில் கூறிய பதில் | Ranil S Answer To Illankai Tamil Arasu Kachchi

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்

இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் மற்றும் அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

சந்திப்பின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நேற்று முன்தினம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சைத் ஆரம்பித்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கருத்தியலுக்கு அமைவாகவே தமது பேச்சுக்கள் இருக்கும் என்பதை எடுத்துரைத்துள்ளனர். 

நாளை, நாளை மறுதினம் (12.05.2023) அதற்கு மறுநாள் (13.05.20230 என்று 3 நாள் பேச்சுக்களில் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தமை தொடர்பில் ஆட்சேபம் எழுப்பியுள்ளனர்.

வடக்கு கிழக்கு எம்.பிக்களை தனியாக சந்திக்க விரும்பியது ஏன்: தமிழரசிடம் ரணில் கூறிய பதில் | Ranil S Answer To Illankai Tamil Arasu Kachchi

பிரித்துப் பேச முடியாது

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், முதலில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேசிவிட்டு பின்னர் கிழக்கு மாகாணத்துடன் அதேபோன்றதொரு தனியான சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரப் பகிர்வு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு – கிழக்கு என்று பிரித்துப் பேச முடியாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர். அதனை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு எம்.பிக்களை தனியாக சந்திக்க விரும்பியது ஏன்: தமிழரசிடம் ரணில் கூறிய பதில் | Ranil S Answer To Illankai Tamil Arasu Kachchi

அபிவிருத்தி தொடர்பில் திட்டவரைவு

அதற்கமைவாக கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து நாளை 11 ஆம் திகதி பொதுப்பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாகக் காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்பிலும், மறுநாள் 12ஆம் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் பேச இணக்கம் காணப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் திட்டவரைவு தயாரில்லாததால் வடக்கு அபிவிருத்தி தொடர்பில் 13ஆம் திகதி பேசுவதில்லை என்றும் கிழக்கு அபிவிருத்தி தொடர்பான திட்டவரைவு தயாராகிய பின்னர் இரு மாகாணங்களையும் இணைத்துப் பேசுவது என்றும் நேற்றைய தினம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US