அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக விதிக்கப்படவுள்ள கட்டணம்! ட்ரம்ப் தரப்பு எதிர்ப்பு
அமெரிக்காவின் (America) வரலாற்றில் முதன்முறையாக நியூயோர்க் (NewYork) நகரில் நெரிசல் வரி அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) தரப்பு அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நியூயோர்க் நகர் மாசடைவதைத் தடுக்கவும் அங்கு பயணிக்கும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் இந்த வரியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆளுநர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கின் முக்கிய வர்த்தக பகுதியான மன்ஹாட்டன் (Manhattan) பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
நியூயோர்க்கின் சுரங்கப்பாதைகள், பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்துக்களை கண்காணிக்கும் போக்குவரத்து அதிகார சபைக்கு நிதி சேர்ப்பதற்காக இந்த வரி அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய, பகல் நேரத்தில் அப்பகுதியில் பயணிக்கும் கார் ஒன்றிடம் இருந்து 9 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது.
இதேவேளை, பேருந்துகளிடம் 14 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளதாகவும் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 19 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
