அரசினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிக கொடூரமானது!
இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிக கொடூரமானது என மனித உரிமை ஆர்வலரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசினால் நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பில் நேற்று (17.02.2026) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்காக வரவுள்ள இப் புதிய சட்டம் மிக மோசமானது. இது சர்வதேச உரிமை சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை.
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
அதில் இருக்கும் பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாக உள்ளதால் நபர் ஒருவர் எந்த குற்றம் செய்தாலும் அரசு அவரை கைது செய்யலாம்.

தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து ஒரு வருடத்தின் பின் வழக்கு தொடுக்க விட்டாலும் கூட அவரை பிணையில் விடுவிக்கலாம்.
வரவுள்ள புதிய வரைபு சட்டம் ஒருவரை ஒரு வருடம் தடுப்பாணையில் தடுத்து வைக்கப்படலாம். மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்படலாம், ஆகையால் இரண்டு வருடங்களுக்கு பின்புதான் ஒருவரை பிணையில் விடுதலை செய்யலாம் என கூறுகின்றது.
பொலிஸாரின் கடமை
இராணுவ மயமாக்கல் இராணுவத்திற்கு பொலிஸாரின் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைக்காக அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் இரானுவம் பொலிஸாரின் கடமையை செய்யக்கூடாது என கூறப்படுகின்றது.
ஆகையால் இந்த சட்டமூலம் அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதை விட மக்களின் ஜனநாயக உரிமையினை இல்லாதொழிக்கின்றது என்று தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam