ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதலுக்கு ட்ரம்புக்கு நெதன்யாகு அழுத்தம்..! டக்கர் கார்ல்சன் பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்க அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
மத்திய ஈரானில் உள்ள “Pickax Mountain” பகுதியில், சுமார் 300 அடி பருமனான பாறைகளுக்கு அடியில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள காரணத்தினால் அதனை வழக்கமான அமெரிக்க ஆயுதங்களால் அழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெதன்யாகு தினமும் ட்ரம்பைத் தொடர்புகொண்டு தாக்குதலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக, ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அமெரிக்க நிர்வாகத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
அழிவை தடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அவசியம்
மேலும், ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் உரச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் பாரசீக வளைகுடா முழுவதும் கதிரியக்க மாசுபாடு பரவி, மில்லியன் கணக்கான மக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது.
அதேவேளை, அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance மற்றும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் Steve Witkoff ஆகியோர் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இராஜதந்திரத் தீர்வை எட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.
இந்த நிலையில், அணு ஆயுதத் தாக்குதல் உலகளாவிய ரீதியில் பேரழிவுக்கும், சர்வதேச அளவில் அணு ஆயுதப் பதற்றம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்றும், இத்தகைய நடவடிக்கையைத் தடுக்க சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri