2027 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு..! 5 மணிநேரம் நீடிக்கும் விவாதம்
தேசிய மக்கள் சக்தி அரசின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, நிதி அமைச்சரான ஜனாதிபதி நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவு - செலவுத் திட்ட உரை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு - செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 7 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
5 நாட்களுக்கு விவாதம்
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்குக் குழுநிலை விவாதம் இடம்பெறும். இறுதியாக, டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரச விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்குக் கூடி வரவு - செலவுத் திட்ட விவாதங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவாதங்களின் போது நேரத்தைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தின் போது ஆளுங்கட்சிக்கு 60 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் நேரம் ஒதுக்கப்படும். அதேவேளை, குழுநிலை விவாதக் காலத்தில் ஆளுங்கட்சிக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் நேர ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
8 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
YOU MAY LIKE THIS
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam