சக்தி வாய்ந்த இடத்தில் நாமலின் மனைவி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்சவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
“இலங்கையில் உள்ள மிகச் சக்திவாய்ந்த இடத்தில் ஒரு சக்திவாய்ந்த பிரார்த்தனை” என பதிவிட்டு இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளரும், சமூக ஊடகப் பிரபலமுமான ஷாலிக இந்திரஜித் என்பவரால் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாமலின் மனைவி
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச சக்திவாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்யும் புகைப்படமே இவ்வாறு வெளியாகியுள்ளது.

இந்த பதிவு தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.
லிமினி ராஜபக்ச என்ன பிரார்த்தனை செய்திருப்பார்......! ஷாலிக இந்திரஜித் குறிப்பிடும் அந்த சக்திவாய்ந்த இடம் எதுவாக இருக்கும்...! என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri