பைடனின் எச்சரிக்கையை மீறும் நெதன்யாகு: ரபா நகரை உற்றுநோக்கும் சர்வதேசம்
பாலஸ்தீனம் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ரபா பகுதியில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய விடயமானது சர்வதேச அளவில் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் எச்சரிக்கையை மீறி, நெதன்யாகு செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் குறித்து கருத்து தெரிவித்துள்ள பைடன்,
'‛காசாவில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பாலஸ்தீனம் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பைடன் எச்சரிக்கை
உயிரிழப்புகளை குறைக்க தவறிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு உதவுவதற்கு பதிலாக கூடுதலாக வலியை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது சா்வதேச ஆதரவை இழக்க நேரிடும்.
அத்தோடு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது'' என கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது,
உறுதியான முடிவு
நாங்கள் ரபா நகரில் தாக்குதலை நடத்துவோம். போரில் இருந்து நாங்கள் விலக போவதில்லை.
இஸ்ரேலில் 1,160 பேரை கொன்று குவித்த கொடிய செயலே, தன்னுடைய உறுதியான முடிவிற்கு காரணம்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது.
மேலும், போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
