சிட்னியில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு.. இந்திய பொலிஸார் வெளியிட்ட தகவல்
அவுஸ்திரேலிய போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரில் ஒருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்படுள்ளது.
ஆனால், அவர் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் "குறைந்த தொடர்பு" கொண்டவர் என்று இந்திய பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கு பயணம்
இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 50 வயதான சாஜித் அக்ரம், ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்தவர் என்று இந்திய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருபொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

1998இல் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதிலிருந்து அவர் ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவரது குடும்பத்தினர் அவரது மோசமான மனநிலை அல்லது செயல்பாடுகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சாஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் ஆகியோரை தீவிரவாதத்திற்கு வழிவகுத்த காரணிகளுக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.