கோலாகலமாக நடைபெற்ற 96 வது ஒஸ்கர் விருதுகள் - விருதுகளை அள்ளிக் குவித்த ஓபன்ஹெய்மர்
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் 96 ஆவது ஒஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் நடைபெற்றுள்ளது.
சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒஸ்கர் விருது வழங்கப்படுகிறது.
இதில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது.
ஓப்பன்ஹைமர் திரைப்படம்
சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.
ஓப்பன்ஹைமர் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.
சிறந்த இயக்குனர் விருதையும் ஓபன் ஹெய்மர் வென்றுள்ளது. அந்த படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார்.
சிறந்த படத்திற்கான விருதையும் இத்திரைப்படம் வென்றுள்ளது. அதேபோல் புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகைக்காக விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
