நாட்டை வந்தடைந்த பிரித்தானிய துணைப் பிரதமர் - உயர்மட்ட பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்பு
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி இன்று (17.02.2026) காலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஏழு மூத்த அதிகாரிகள் டேவிட் லாமியின் பிரதிநிதிகள் குழுவாக இலங்கைக்கு வந்துள்ளனர்.
அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரித்தானிய துணைப் பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற உயர் அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கும் மனிதாபிமான உதவிகள் மற்றும் திட்டத்தைக் கண்காணிப்பதும் துணைப் பிரதமரின் பயணத்தின் நோக்கமாகும்.
கூடுதலாக, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் வருகையின் போது, குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக சாசனத்தில் கையெழுத்திடுவதும் திட்டமிடப்பட்டுள்ளது.