ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் நேற்று (10.3.2024) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரச ஊழியர்களின் சம்பளம்
அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
எதிர்வரும் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
