மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள் - நாடாளுமன்றில் சிறீதரன்
இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை – நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மலையக மக்களுக்கு உடனடியாக நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.05.2026) நடைபெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சொந்த நிலத்தைப் பெற்றுத்தர வேண்டும்
மேலும் உரையாற்றுகையில், நீலகாமம் தோட்டத்தில் கூலிக்காக அமர்த்தப்பட்ட கும்பலொன்றினால் தொழிலாளி ஒருவரின் குடியிருப்பு ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மக்களுக்கு இன்றும் சொந்த நிலங்கள் வழங்கப்படவில்லை என்பதை இந்தச் சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
அத்துடன், ஒரு சிறு நிலத்தில் குடிசையொன்றை அமைப்பதற்குக் கூட மலையக மக்களுக்கு உரிமை இல்லை என்பது வேதனையானது.

தொடர்ந்தும், மனித முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிப் பேசும் இந்த அரசு, அந்த மக்கள் தமக்கென ஒரு சொந்த நிலத்தைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்குரிய வழியை இந்தத் தடவையாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஆகவே, நீலகாமம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், மலையக நில உரிமை விவகாரத்தில் அரசு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam