தவெகவுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு - காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை
புதிய இணைப்பு
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது.
இதுதொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.
மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இந்த கூட்டணியானது இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and… pic.twitter.com/Aig79MoRoE
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 6, 2026
த.வெ.க.வை ஆதரிப்பதன் மூலம் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.
முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக இந்திஙய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க.வினருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்த காங்கிரஸ்
இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

இதில் த.வெ.க.வை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri