வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையின் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் (02.03.2025) காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே 23.2NM NORTH EAST OF PPD Coordinate(s)of the location09°55’N,080°42E , 09°55’N,080°36E, 09°51’N,080°42E, 09°51’N,080°36E ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல்களான p423,p433.p483 ஆகிய கலங்களில் இருந்து துப்பாக்கி சூட்டுப்பயிற்சி இடம்பெறவுள்ளது.
அறிவுறுத்தல்
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam
