மித்தெனிய முக்கொலை! மேலும் ஒரு சந்தேக நபர் கைது
மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று அந்த சந்தேக நபரை கைது செய்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
முக்கொலை
இந்த சந்தேக நபர் முக்கொலைக்கு உதவி செய்து சதி செய்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

இதன்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri