தயார் நிலையில் இருக்கவும்: ரணிலிடம் இருந்து நவீன் திஸாநாயக்கவுக்கு சென்ற அறிவிப்பு (photos)
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
குறித்த பதவியை ஏற்பதற்குத் தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணசபை ஆளுநர்
மேல் மாகாணசபை ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
இவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாகாண சபைகளின் செலவினங்கள் முகாமைத்துவம் தொடர்பில் ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மாகாண சபைகள் செயற்படாத நிலையில், அவற்றின் செலவினங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான சிக்கல் எழுந்துள்ளது. இதனையடுத்து மாகாண சபைகளின் நிர்வாகம் மட்டுமன்றி செலவினங்கள் தொடர்பான அதிகாரமும் ஜனாதிபதியின் மூலம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளிடம் சிக்கித் தவிக்கும் இலங்கை: தடுமாறுகிறதா ரணில் அரசாங்கம்..! |