வாகன விபத்தில் 36 வயது பெண் பலி! நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி
காலி - இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 ஆம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, நேற்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
முலனகந்த பகுதியில் இருந்து சமகி மாவத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan