அரச தொழிலை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
அரச துறைக்கு 75 ஆயிரம் பேர் வரை புதிதாக இணைப்பதற்கு நாங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற முழு நாடுமே ஒன்றாக நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்கள் சிலரது செயற்பாடுகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
புதிய வேலைவாய்ப்பு
மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை வியாபித்திருக்கின்றது. அதனைக் கட்டுப்படுத்த எமது அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
எனினும், இதில் துயரமான விடயம் என்னவென்றால் அரச அதிகாரிகள் பலர் கூட இதற்கு துணை போகின்றனர்.

அதே சமயம், கடந்த 2025ஆம் ஆண்டு பல்வேறு துறைகளிலும் வெற்றிகளை அடைந்த வருடமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் அரச துறைக்கு 75ஆயிரம் பேரை புதிதாக இணைக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாமல், பொலிஸ் துறைக்கு 10 ஆயிரம் பேரையும், இராணுவத்திற்கும் புதிதாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
வடக்கில், தமிழ் மொழி பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே பொதுமக்கள் சிரமம் ஏதுமின்றி தமிழில் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் நோக்கில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.