கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ! சாரதி பலி - 8 பேர் வைத்தியசாலையில்
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று காலை (18) ஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், பேருந்து நடத்துனர், குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம்
சாரதி இருக்கைக்கு அருகிலிருந்த பேருந்தின் கதவு திடீரென திறந்ததாகவும், அந்த நேரத்தில் சாரதி அதை மூட முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண்மேட்டில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு வீதியின் குறுக்கே விழுந்த சாரதி, படுகாயமடைந்த நிலையில், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பேருந்து நடத்துனர், ஒரு சிறு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஏழு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை அடிப்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தை தொடர்ந்து சாலையின் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் சாரதி சீட் பெல்ட் அணியவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக தகவல் - நடராஜா மலர்வேந்தன்




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan