அடங்காத குண்டு வெடிப்பு சத்தங்கள்: ஈரானின் பலம் வாய்ந்த பொறுப்பில் அலி கமேனியின் மகன்..!
மத்திய கிழக்கில் பதற்ற நிலை தொடர்ந்து வரும் நிலையில் ஈரானின் உச்சபட்ச தலைவராக, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
கமேனியின் மரணம்
5வது நாளாக இன்றும் இந்த மோதல் இன்று தொடர்கிறது. கமேனியின் இந்த எதிர்பாராத மரணத்தால் கொந்தளித்த ஈரான் இராணுவம், இஸ்ரேலைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க இராணுவ முகாம்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு நடுவே ஈரானின் புதிய உச்ச தலைவர் யார் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள நிபுணர்களைச் சபையே புதிய உச்ச தலைவரைத் தேர்வு செய்யும்.

புதிய உச்சபட்ச தலைவர் தெரிவு
அதுவரை ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அலிர்சா அராஃபி கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். இப்போது அந்நாட்டின் வல்லுநர் சபை புதிய உச்சபட்ச தலைவரை தெரிவு செய்துள்ளது.
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி ஈரான் நாட்டின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
56 வயதான மௌஜ்தபா, அலி காமேனியின் இரண்டாவது மகன் ஆவார். நீண்டகாலமாகவே கமேனியின் வாரிசாக இவர் கருதப்பட்ட வந்த சூழலில் அவரது நியமனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த விடயத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஈரான் அரசு உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam