நாட்டில் இறப்பருக்கு பற்றாக்குறை
தற்போது நாட்டில் இயற்கை இறப்பர் உற்பத்தி குறைவடைந்துள்ளதால் இறப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம் எண்ணெய் போன்ற ஏனைய இலாபகரமான பயிர்களுக்கு இறப்பர் செய்கை நிலங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இறப்பர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இறப்பர் தொழில்களை நம்பியிருக்கும் தொழில்களின் உற்பத்தியினை விரிவு படுத்துவதற்கும் சந்தை வாய்ப்பினை அதிகரிப்பதற்குமான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பர் உற்பத்தியினை விரிவுபடுத்த..
குறிப்பாக டயர் உற்பத்தியாளர்கள், உலர் இறப்பரின் பற்றாக்குறை காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தவிர, டயர் மற்றும் பிற இறப்பர் சார்ந்த தொழில்துறை பணியாளர்கள் நாட்டில் இயற்கை இறப்பரின் பற்றாக்குறை காரணமாக தங்கள் உற்பத்தி தளத்தை விரிவுபடுத்த முடியாதுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு இறப்பரின் விலைகள் சர்வதேச விலைகளுக்கு இணையாக இருந்தால் மட்டுமே ஏற்றுமதி விடயத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டிபோட முடியும் என, இறப்பர் கையுறை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறப்பர் உற்பத்தியினை விரிவுபடுத்துவதற்கும் மீள் நடுகை செய்வதற்கும் தேசிய திட்டம் இல்லாததன் காரணமாக அந்நிய செலாவணியை ஈட்டும் இறப்பர் சார்ந்த தொழில்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan