ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த ஜப்பான்
29 ரஷ்ய (Russia) நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
ரஷ்ய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகள்
எனவே உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும், பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன.
அதேபோல் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.

அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri