புதுக்குடியிருப்பில் ஆரம்பமான Clean Sri Lanka திட்டம்
''ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை'' என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’(Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் இன்றையதினம்(12) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெல் களஞ்சிய சாலையானது கோவிட் காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்படுகின்றது.
தூய்மையான இலங்கை
இதனால் பல சமூக சீர்கேடுகள், சட்டவிரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால் குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டு தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் செயற்திட்டதின் கீழ் பொதுமக்களால் இன்றையதினம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் பொதுமக்களிடையே கலாசார உணர்வை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பொங்கல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த பணியினை மேற்கொண்டிருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



















Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
