கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானம்
கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
கரும்புகை வெளியிடும் வாகனங்கள்
அதன் போது கரும்புகை வெளியிடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அதன் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தைப் பொலிசாரும், வாகனத்தின் வருமான அனுமதிப் பத்திரத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்கவுள்ளனர்.
அதன் பின்னர் 14 நாட்களுக்குள்ளாக குறித்த வாகனம் கரும் புகை வெளியிடுவதற்கான காரணம் கண்டறியப்பட்டு , அதனை நிவர்த்தி செய்தாக வேண்டும்.
பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் வாகனம் ஓட்டிக் காண்பிக்கப்பட்டு கரும்புகை வௌியாகவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அந்த வாகனத்தை தொடர்ந்தும் பயன்பாட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கப்படும்.
அவ்வாறில்லாத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் (Black List) இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த அதிகாரி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
