வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவைகள்
மண்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான தொடருந்து பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த தொடருந்து மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரவு அஞ்சல் தொடருந்து மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து ஆகியவை தற்போது மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற வானிலை காரணமாக, ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட மண்சரிவு தொடருந்து போக்குவரத்தை பாதித்தது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |