காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் (Photos)
காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஹட்டன் - மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நேற்று மாலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போரட்டக்காரர்கள் வலியுறுத்தல்
இதன்போது, “அதிகார பேராசை கொண்ட ரணில் ராஜபக்சவினால் கோல்பேஸ் போராளிகள் தாக்கப்பட்டதை கண்டிக்கின்றோம், கொலைகார பட்டலந்த அராஜகவாதியை விரட்டியடிப்போம்.
மிலேச்சத்தனமான காலிமுகத்திடல் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம், நாட்டினுள் மீண்டும் பட்டலந்த ஒன்றை கொண்டு வர வேண்டாம்” என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கறுப்பு கொடிகளை பிடித்தவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் சொல்லி ஆக வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடருமெனவும் போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பங்களிப்புக்கள்
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு புதிய பிரதமர் தினேஷ் வழங்கும் அறிவுரை |
யாழ்ப்பாணம்
காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாகவே இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரயோகிக்கப்பட்ட வாசகங்கள்
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான ரணில் மற்றும் ராஜபக்சர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் எனும் தொனிப்பொருளிலேயே இந்த ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், “மக்களே கட்சி, நிறம், பேதமின்றி அடங்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம், அடக்குமுறையை எதிர்ப்போம், மக்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம், பயங்கரவாத அவசாரகால சட்டங்களை உடனடி இரத்து செய்வோம்” என்றவாறான பாதாதைகளை ஏந்தியவண்ணம் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
போராட்டதிற்கான காரணம்
காலிமுகத்திடலில் உள்ள " கோட்டா கோ கம" பகுதிக்குள் நேற்று முப்படையினர் மற்றும் பொலிஸார் நுழைந்ததுடன் அங்கிருந்த கொட்டகைகளை அகற்றி போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டமையே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட காராணம் என தெரிவித்துள்ளனர்.
இந்த போரட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: கஜி
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் நள்ளிரவில் நடந்தது என்ன..! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை |



