மாணவர்களுக்கான புகழ்பெற்ற 'எராஸ்மஸ்' கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் இணையும் பிரித்தானியா
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய (Brexit) ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்களுக்கான புகழ்பெற்ற 'எராஸ்மஸ்' (Erasmus) கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் 2027-ம் ஆண்டு முதல் மீண்டும் இணையப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பிரித்தானிய மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியை ஐரோப்பிய நாடுகளில் மேலதிக கட்டணமின்றி பயில முடியும். அதேபோல் ஐரோப்பிய மாணவர்களும் பிரித்தானியாவிற்கு வந்து கல்வி பயில வாய்ப்பு ஏற்படும்.
நிபந்தனைகள்
இதற்காக 2027/28 கல்வி ஆண்டில் பிரித்தானியா 570 மில்லியன் பவுண்டுகளைச் செலுத்தவுள்ளது.

இத்திட்டத்திற்கு மாற்றாக 2021-ல் தொடங்கப்பட்ட 'டியூரிங்' (Turing) திட்டத்தின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி, தொழிற்கல்வி பயில்பவர்களும் இந்ததிட்டத்தால் பயன்பெற முடியும் என்றாலும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குப் பணிந்துவிட்டதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி விமர்சித்துள்ளது.