பிரித்தானிய பொலிஸார் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், 'இன்டிபாடா' (Intifada - உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள் அல்லது அது தொடர்பான பதாகைகளை ஏந்துபவர்களைக் கைது செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மான்செஸ்டர் யூத வழிபாட்டுத் தலத் தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இத்தகைய முழக்கங்கள் வெறுப்பைத் தூண்டும் செயலாகக் கருதப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் கேர் ஸ்டார்மர், யூத சமூகத்தின் பாதுகாப்பிற்காக 28 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், போராட்டச் சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இருப்பினும், பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் இந்த முடிவை பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் முதலிடத்தில் எலான் மஸ்க்! புதிய உச்சம் தொட்ட அவரின் சொத்துமதிப்பு - முதல் நபர் என்ற சாதனை