ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் வசமாக சிக்கிய புடின்.. அம்பலமான உண்மைகள்
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் உள்ள மறைமுக தொடர்புகள் தற்போது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யப் பெண்களைப் பயன்படுத்தி அந்த நாட்டின் மிகப்பெரிய உளவுத்துறைக்காக ஜெஃப்ரி எப்ஸ்டீன் செயல்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புடின் மற்றும் ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடும் ஆயிரக்கணக்கான அதிர்ச்சியூட்டும் கோப்புகள், எப்ஸ்டீனுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்புகளைப் பற்றி விவாதிக்கும் பெயரிடப்படாத ஆதாரங்களைக் காட்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எப்ஸ்டீனும் ரஷ்ய நிழல் உலகத்திற்கு நெருக்கமான மற்றும் ஆழமான தொடர்பு இருந்ததாகவே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
பெயர் குறிப்பிடாத ஒரு பிரபலம் 2011இல் புடினை சந்திக்கும் வாய்ய்புக்கு எப்ஸ்டீனை நாடியதாக தெரிய வந்துள்ளது.

2014ல் ஜப்பான் தொழிலதிபர் ஒருவர் புடினை சந்திக்கும் வாய்ப்புக்கு எப்ஸ்டீனை துணைக்கழைத்துள்ளார். 2010ல் ரஷ்ய விசா தொடர்பில் உதவி வேண்டுமா என எப்ஸ்டீன் ஒருவருக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் பராக் உடன் நெருக்கமான உறவு வைத்திருந்த எப்ஸ்டீன், இஸ்ரேலில் உளவாளிகளுக்கான பயிற்சியும் முடித்துள்ளார்.
இருப்பினும், வெளியான கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உயர்மட்டப் பெயர்களும் எப்ஸ்டீனுடனான தங்கள் தொடர்பில் உள்ள அனைத்து தவறுகளையும் மறுத்துள்ளனர்.

அண்மையில், நீதித்துறை வெளியிட்டுள்ள மில்லியன் கணக்கான ஆவணங்களில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 2,000 காணொளிகள் மற்றும் 180,000 புகைப்படங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்த ஆவணங்களில் ஒன்றில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri