போதைப்பொருள் கண்காணிப்பு தரவுகள் கசிவு:பெரும் குழப்பத்தில் பொலிஸ் துறை
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திலுள்ள Police Narcotics Bureau (PNB) கணினி தரவு மற்றும் தகவல்கள் போதை பொருள் மாப்பியாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆழ் கடல் மீன்பிடி படகுகளில் கொண்டு செல்லும் போதை பொருள் தொடர்பில் கண்காணிக்கப்படும் (Vessuls Monitoring System) VMS மற்றும் அது தொடர்பான கணினி தகவல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப்புலனாய்வு துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்ட தரவுகள்
இந்தத் தகவல்களை பயன்படுத்தி போதைப்பொருகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் படகுகளை , கடற்படையின் கண்காணிப்பின் கீழ் வராத வகையில் பயணிக்க முடிந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆழ் கடல் மீன்பிடி படகுகளை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் உயர் கணனி தொழில்நுட்பத்தை (Vessuls Monitoring System) VMS இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் காணப்படுகிறது. இது போதைப்பொருள் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பொலிஸ் திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகளால் இதை கண்காணிக்க முடியாது.
வெளியாருக்கு கொடுக்கப்பட்ட கடவுச் சொல்
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, ஆழ் கடல் மீன்பிடி படகுகளின் நடமாட்டம், அந்தக் படகுகளின் உரிமையாளர்களின் முழு விவரங்களையும் பார்க்கக் கூடிய "VMS" அமைப்பை அணுகுவதற்கான 'கடவுச்சொற்களை' சில அதிகாரிகள் வெளியாட்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல்காரர்களின் கைகளுக்கு இதுபோன்ற தகவல்கள் சென்றதால், போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் கடந்த காலங்களில் தடைபட்டுள்ளன.மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தரவு அமைப்பு நிறுவியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், போதைப்பொருள் பணியகத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஊழல் அதிகாரிகளை பணியகத்திலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் இந்த நாட்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பதில் ஆய்வாளர்கள் ஏற்கனவே போதைப்பொருள் பணியகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர், மேலும் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri