தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் பரிதாப மரணம்
அரலங்கவில - கண்டேகம பகுதியில் தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(20.12.2025) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகில கிருஷன் கவிந்த என்ற இரண்டு வயது சிறுவனே இவ்வாறு நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
நேற்றையதினம் காலை வீட்டிற்கு வெளியே இருந்த தந்தையுடன் முகம் கழுவச் செல்வதாக இந்த சிறுவன் சொல்லிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, முகம் கழுவிவிட்டு வீட்டிற்கு வந்த தந்தை தனது இளைய மகன் குறித்து கேட்டபோது, தந்தையத் தேடி மகன் சென்றது தொடர்பில் தெரிவித்தவுடன் சிறுவனை தேடும் நடவடிக்கையில் வீட்டினர் ஈடுபட்டனர்.

இதன்படி, உயிரிழந்த சிறுவனின் சகோதரி, தமது வீட்டின் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றினுள் விழுந்து கிடப்பதை கண்டு வீட்டின் ஏனையோருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த குழிக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam