பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட கணவன் : 200 மில்லியன் நட்டஈடு கோரும் மனைவி
அண்மையில் நாரம்மலையில் பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கணவன் தொடர்பில் 200 ரூபா நட்டஈடு கோரி மனைவியான கமனி ரூபிகா பிரியங்கனி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் லொறி ஒன்றில் பயணித்த நபர் மீது சிவில் உடையில் இருந்து கே. குணவர்தன என்ற பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
இதன் காரணமாக மூன்று பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அடிப்படை உரிமை வழக்கு
இந்நிலையில் எவ்வித நியாயமான காரணமும் இன்றி தனது கணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரதிவாதிகளிடமிருந்து 200 மில்லியன் ரூபா நட்டஈடு வசூலித்து தருமாறு நீதிமன்றிடம் அவர் கோரியுள்ளார்.
வாகனச் சோதனையின் போது பொலிஸார் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தயாரிக்க உத்தரவிடுமாறும் உச்ச நீதிமன்றத்திடம், உயிரிழந்தவரின் மனைவி கோரியுள்ளார்.
இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கே. குணவர்தன நாரம்மல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.