அரச சார்பற்ற அமைப்புக்களை ஆராய நாடாளுமன்றக்குழுவை கோரும் நாமல்
நாட்டில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத என்ஜீஓ என்ற அரசு சாரா நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்புகளின் நிதி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, இந்த அமைப்புகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
நிதி ஆதாரங்கள்
சில அரசு சாரா நிறுவனங்கள் முறையான பதிவு இல்லாமல் செயற்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் வெளியிடப்படாத வெளிநாட்டு நிதியைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்கள் ஊடாக, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

போரின் பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு என்ற சாக்குப்போக்கின் கீழ் இந்த அமைப்புகள் செயல்பட்டாலும், அவற்றின் நிதி ஆதாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தெளிவாக இல்லை என்று நாமல் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தால் இது தொடர்பான சந்தேகம் தெளிவாக எழுப்பப்படும்போது, இலங்கை அரசாங்கம் இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ச கேட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 27 நிமிடங்கள் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri