மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பெப்ரவரி 14ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை
எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் நடைமுறையாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri