என்பிபி நடத்தும் நாடகம்:இரகசியத்தை அம்பலப்படுத்திய நாமல்
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காக என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து ஒன்றும் நடக்கப்போவதில்லை என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
தனக்கு எதிரான நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு முன்னிலையான நிலையில் ஊடகங்களுக்கு இன்று (29.01.2026) கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
என்பிபியின் மோசடிகள்
நிலக்கரி டெண்டர்,325 கொள்கலன் விடுவிப்பு,கெப் வண்டி கொள்வனவு போன்ற மோசடிகளை மறைப்பதற்கு என்னை கைது செய்வதால் ஒரு பலனும் நடக்கப் போவதில்லை.
அரசாங்கம் ஆடாத்தாக நீதித்துறை மற்றும் பொலிஸ் துறையில் அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிக்கிறது.பொலிஸ் துறையில் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.நீதிபதிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.அவர்களின் பிள்ளைகளுக்கு இன்றும் பாடசாலைகள் கிடைக்கவில்லை.

அரசாங்கத்திற்கு ஏற்ற மாதிரி இந்த நிறுவனங்கள் செயற்படவில்லை என்றால் அல்லது அமைச்சர்கள் சொற்படி நடக்கவில்லை என்றால் தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்த அரசாங்கம் முறைமை மாற்ற செய்வதாக ஆட்சிக்கு வந்தது.ஆனால் இருந்ததற்கு மாறாக பின்னோக்கி கொண்டு செல்வதோடு முழுமையாக முறைமை நாசமாக்குவதற்கே செயற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.