உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகர குறித்து வெளியான தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு (Shani Abeysekara) எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஷானி அபேசேகர (Shani Abeysekara) நடவடிக்கை எடுக்கவில்லையென கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் குளியாப்பிட்டிய மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் அவரை கைது செய்ய முடியாது.
அத்தோடு அதற்கான போதிய சாட்சியங்கள் இல்லை எனவும் சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 23 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (26.01.2026) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.