நாமலுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை:சர்ச்சையை கிளப்பியுள்ள பதிவு..
இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு நாமல் ராஜபக்ச எம்.பிக்கு இந்திய அரசாங்கத்தில் எவ்வித இராஜதந்திர அழைப்பும் விடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்திய குடியரசு தினம் நாளை நடைபெறவுள்ளது. கடந்த 23 ஆம் திகதி நாமல் ராஜபக்சவின் ஊடக பிரிவால் இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி,எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒடிஷா மாநிலத்திற்குப் பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொய்யான செய்தி வெளியிடல்
ஆனால் அது தொடர்பில் நாமல் ராஜபக்ச கட்சியின் களனி அமைப்பாளர் மிலிந்த ராஜபக்ச (Milinda Rajapaksha) தனது சமூக வலைதளத்தில் அவ்வாறு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தேடி பார்த்ததில் உண்மையில் எவ்வித ராஜதந்திர அழைப்பும் நாமல் ராஜபக்ச எம்.பிக்கு விடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவின் 77-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவிலுள்ள கேஐஐடி (KIIT University, Odisha) பல்கலைக்கழத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடியரசுத் தின நிகழ்வுக்கே நாமல் உள்ளிட்ட குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் உட்பட குழுவினர் கலந்துரையாடிய படத்துடனே குறித்த பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதில் நாமல் சிறப்புரையாற்றுவார் என மிலிந்த ராஜபக்ச (Milinda Rajapaksha) தனது சமூக வலைதளத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரா கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன, முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திகா அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன, சம்பத் அதுகோரல மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன அரசியல் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோர் அடங்குவர்.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி